பெலகாவியில் நடக்க இருந்த காங்கிரஸ் மாநாடு மழையால் ரத்து


பெலகாவியில் நடக்க இருந்த காங்கிரஸ் மாநாடு மழையால் ரத்து
x
தினத்தந்தி 15 April 2023 6:45 PM GMT (Updated: 15 April 2023 6:45 PM GMT)

பெலகாவியில் நடக்க இருந்த காங்கிரஸ் மாநாடு மழையால் ரத்து செய்யப்பட்டது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் பெலகாவி மாவட்டம் யமகனமரடி பகுதியில் பிரஜாத்வானி யாத்திரையை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டது. அதன்படி நேற்று முன்தினம் மாநாட்டிற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி ஆகியோர் வந்திருந்தனர்.

சரியாக மாநாடு தொடங்கும் நேரத்தில் திடீரென்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் அங்கிருந்து இருக்கைகள் அனைத்தும் காற்றில் தூக்கி வீசப்பட்டது. இதை பார்த்த காங்கிரஸ் பிரமுகர்கள் உடனே மாநாட்டை ரத்து செய்வதாக அறிவித்தனர். இதையடுத்து மாநாட்டிற்கு வந்திருந்த கட்சி தொண்டர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.


Next Story