'கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் நியாயமாக நடந்து கொள்ளவில்லை' - அனுராக் தாக்கூர் விமர்சனம்


கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் நியாயமாக நடந்து கொள்ளவில்லை - அனுராக் தாக்கூர் விமர்சனம்
x

கூட்டணி கட்சிகளுக்கு மதிப்பு அளிக்காவிட்டால் பிரிந்து செல்ல வேண்டிய நிலைதான் ஏற்படும் என அனுராக் தாக்கூர் கூறினார்.

புதுடெல்லி,

2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கிய நிலையில், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும் தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சிகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க.வுடன் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் தலைமை நியாயமாக நடந்து கொள்ளவில்லை என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தங்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு நியாயம் செய்யாமல், அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அளிக்காமல் இருந்தால், பிரிந்து செல்ல வேண்டிய நிலைதான் ஏற்படும். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்" என்று தெரிவித்தார்.


Next Story