ஜார்கண்ட் காங்கிரஸ் எம்.பி. கீதா கோரா பா.ஜ.க.வில் இணைந்தார்


ஜார்கண்ட் காங்கிரஸ் எம்.பி. கீதா கோரா பா.ஜ.க.வில் இணைந்தார்
x
தினத்தந்தி 26 Feb 2024 9:49 AM GMT (Updated: 26 Feb 2024 10:54 AM GMT)

ஜார்கண்ட் காங்கிரஸ் எம்.பி. கீதா கோரா பா.ஜ.க.வில் இணைந்தார்.

ராஞ்சி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சி தாவல் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மாற்று கட்சியினர் பா.ஜனதாவில் இணைவது தொடர் கதையாக உள்ளது.

அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிங்பூம் (எஸ்.டி) தொகுதியின் காங்கிரஸ் எம்.பி., கீதா கோரா, இன்று அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தார். அம்மாநில பா.ஜ.க. மாநிலத் தலைவர் பாபுலால் மராண்டி முன்னிலையில் கீதா கோரா கட்சியில் இணைத்து கொண்டார்.

அதன்பின்னர் கீதா கோரா கூறுகையில், "நான் இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன். காங்கிரஸ் கட்சி திருப்திபடுத்தும் அரசியலில் ஈடுபட்டு நாட்டை சிக்கலில் சிக்க வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி குடும்ப அரசியல் செய்கிறது," என்று அவர் கூறினார்.

2019 மக்களவைத் தேர்தலில் ஜார்க்கண்டில் உள்ள 14 நாடாளுமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க.-ஏ.ஜே.எஸ்.யு. கூட்டணி 12 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story