இமாசலபிரதேச தேர்தல்: 1 லட்சம் அரசு வேலைகள், 300 யூனிட் இலவச மின்சாரம் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி


இமாசலபிரதேச தேர்தல்: 1 லட்சம் அரசு வேலைகள், 300 யூனிட் இலவச மின்சாரம் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
x

இமாசலபிரதேச மாநில சட்டசபைக்கு வரும் 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

சிம்லா,

இமாசலபிரதேச மாநில சட்டசபைக்கு வரும் 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் முன்னிலையில் தலைநகர் சிம்லாவில் வெளியிட்டது.

தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே ஒரு லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

300 யூனிட் இலவச மின்சாரம், ஒரு வீட்டிற்கு தலா நான்கு மாடுகளை வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும், ஒவ்வொரு தொகுதியிலும் ரூ.10 கோடி 'ஸ்டார்ட்அப் பண்ட்' நிதி மையம் திறக்கப்படும்.

மேலும், பால் பண்ணையில் ஈடுபடுபவர்களிடமிருந்து 10 கிலோ பாலை அரசு கொள்முதல் செய்யும், ஆப்பிள் விவசாயிகளுக்காக அரசு ஒரு குழுவை அமைக்கும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ஸ்மார்ட் வில்லேஜ் திட்டத்தை அரசு செயல்படுத்தும் ஆகிய பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இது வெறும் தேர்தல் அறிக்கை மட்டுமல்ல, இமாசல பிரதேச மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக தயாரிக்கப்பட்ட ஆவணம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் தானி ராம் ஷண்டில் கூறினார்.

5 ஆண்டுகளுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை.மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பாஜக தவறிவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.


Next Story