பிரதமர் மோடி, மணிப்பூரை முற்றிலும் கைவிட்டுவிட்டார் - காங்கிரஸ் குற்றச்சாட்டு


பிரதமர் மோடி, மணிப்பூரை முற்றிலும் கைவிட்டுவிட்டார் - காங்கிரஸ் குற்றச்சாட்டு
x

தொடர்ந்து மவுனம் சாதிக்கிறார் பிரதமர் மோடி என்றும் மணிப்பூரை முற்றிலும் கைவிட்டுவிட்டார் என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இரட்டை என்ஜின் பா.ஜனதா அரசின் பிளவு கொள்கையால், 5 மாதங்களுக்கு முன்பு மணிப்பூரில் கலவரம் வெடித்தது. கர்நாடக சட்டசபை தேர்தல் உள்ளிட்ட பணிகளில் ஒரு மாதமாக மூழ்கி இருந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அதன்பிறகு மணிப்பூர் சென்றார்.

அதன்பிறகும் நிலைமையில் முன்னேற்றம் இல்லை. மோசம் என்பதில் இருந்து படுமோசம் என்ற நிலைக்கு சென்று விட்டது. பிரதமர் மோடி தனது 133 நிமிட நாடாளுமன்ற உரையில், 5 நிமிடம் மட்டும் மணிப்பூர் பற்றி பேசினார். அவர் இன்னும் மவுனம் சாதிக்கிறார்.

கடைசியாக அவர் எப்போது மணிப்பூருக்கு சென்றார்? ஒரு மாநிலத்தையும், அதன் மக்களையும் ஒரு பிரதமர் முற்றிலுமாக கைவிட்ட சம்பவம் இதற்கு முன்பு நடந்தது இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story