கேரளாவில் தொடர் கனமழை: 6 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை
தொடர் கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கோட்டயம், காசர்கோடு, கண்ணூர், திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை(புதன்கிழமை) விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். விடுமுறையை கணக்கிட்டு மற்றொரு நாள் வேலை நாளாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அறிவித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story