டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 1,603 பேருக்கு தொற்று உறுதி


டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 1,603 பேருக்கு தொற்று உறுதி
x

கோப்புப்படம் 

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,603 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று புதிதாக 1,603 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் கொரோனா பாதிப்புடன் தற்போது 6,120 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story