மின்சாரம் தாக்கி தம்பதி சாவு


மின்சாரம் தாக்கி தம்பதி சாவு
x

பீதரில் மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழந்தார்.

பீதர்:

பீதர் மாவட்டம் புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் மல்லிகார்ஜுன். இவரது மனைவி சரணம்மா. இந்த தம்பதிக்கு சொந்தமாக விவசாய தோட்டம் உள்ளது. அங்கு 2 பேரும் விவசாயம் செய்து வந்தார்கள். நேற்று காலையில் வழக்கம் போல் தோட்டத்தில் வேலை செய்வதற்காக மல்லிகார்ஜுன், சரணம்மா சென்றானர். அப்போது அங்கு அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை மல்லிகார்ஜுன், சரணம்மா தெரியாமல் மிதித்து விட்டனர். இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே தம்பதி இறந்து விட்டார்கள். மின்கம்பியை மாற்றும்படி மின்வாரியத்திற்கு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்ததாகவும், அவர்களது அலட்சியத்தால் தான் மின்கம்பி அறுந்து விழுந்து தம்பதி பலியாக நேரிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பீதர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story