உத்தரபிரதேசம்: பா.ஜனதா எம்.பி.க்கு கோர்ட்டு வாரண்டு


உத்தரபிரதேசம்: பா.ஜனதா எம்.பி.க்கு கோர்ட்டு வாரண்டு
x

கோப்புப்படம்

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா எம்.பி.க்கு கோர்ட்டு வாரண்டு பிறப்பித்தது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி தொகுதி பா.ஜனதா எம்.பி. ஹரிஷ் திவிவேதி. கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கும், அவருடைய 2 சகோதரர்களுக்கும் எதிராக பஸ்தி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து 3 தடவை ஹரிஷ் திவிவேதிக்கும், 2 சகோதரர்களுக்கும் கோர்ட்டு வாரண்டு பிறப்பித்தது. ஆனால் 3 பேரும் ஆஜராகவில்லை.

இந்தநிலையில், 3 பேருக்கும் கோர்ட்டு புதிதாக வாரண்டு பிறப்பித்துள்ளது. 22-ந் தேதிக்குள் 3 பேரிடமும் வாரண்டை ஒப்படைத்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, கோர்ட்டு சொல்லும் நேரத்தில் ஆஜராவேன் என்று ஹரிஷ் திவிவேதி எம்.பி. கூறியுள்ளார்.


Related Tags :
Next Story