கேரளாவிலும், மராட்டியத்திலும் வேகம் எடுக்கிறது கொரோனா


கேரளாவிலும், மராட்டியத்திலும் வேகம் எடுக்கிறது கொரோனா
x

கோப்புப்படம்

கேரளாவிலும், மராட்டியத்திலும் கொரோனா பாதிப்பு வேகம் எடுக்க தொடங்கி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொடர்ந்து கட்டுக்குள் இருந்தாலும், கேரளா மற்றும் மராட்டிய மாநிலங்களில் வேகம் எடுக்கிறது.

நேற்று முன்தினம் நாடு முழுவதும் 2,745 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 3,712 ஆக அதிகரித்தது.

கேரளாவில் 1,197 பேரும், மராட்டியத்தில் 1,081 பேரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இது வரை நாட்டில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 64 ஆயிரத்து 544 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரு நாளில் 2,584 பேர் குணம் அடைந்து பல்வேறு இடங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை நாட்டில் 4 கோடியே 26 லட்சத்து 20 ஆயிரத்து 394 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்திருக்கிறார்கள்.

தொற்று பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலையில் நேற்று 5 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை கேரளாவில் விடுபட்டு கணக்கில் கொண்டு வரப்பட்டதாகும். கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. நேற்று இந்த எண்ணிக்கையில் 1,123 அதிகரித்தது. இதனால் நேற்று காலை நிலவரப்படி 19 ஆயிரத்து 509 ஆக அதிகரித்தது.


Next Story