'காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும்' - மல்லிகார்ஜுன கார்கே


காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும் - மல்லிகார்ஜுன கார்கே
x

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

போபால்,

மத்தியபிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அங்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசார பணிகளை தொடங்கியுள்ளன. அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக மல்லிகார்ஜுன கார்கே மத்திய பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள சாகர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதியளிக்கிறேன். சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும். பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.


Next Story