டி.கே.சிவக்குமார் இன்று டெல்லி பயணம் - சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி. தகவல்


டி.கே.சிவக்குமார் இன்று டெல்லி பயணம் - சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி. தகவல்
x

கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பது பற்றி ஆலோசிக்க டி.கே.சிவக்குமார் இன்று டெல்லிக்கு வர உள்ளதாக அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி. தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி பதவிக்கு டி.கே.சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் கருத்துகளை கேட்டு, ரகசிய வாக்கெடுப்பு நடத்திய மேலிட பார்வையாளர்கள் அதன் அறிக்கையை கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் தாக்கல் செய்துள்ளனர்.

இதையடுத்து டெல்லி வரும்படி சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்தது. அதன்பேரில் சித்தராமையா டெல்லி சென்றார். ஆனால் டி.கே.சிவக்குமார் டெல்லிக்கு செல்லாமல் தனது பயணத்தை திடீரென ரத்து செய்தார். அவருக்கு பதிலாக அவரது தம்பி டி.கே.சுரேஷ் எம்.பி. டெல்லி சென்றுள்ளார்.

இந்த நிலையில் டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் டி.கே.சுரேஷ் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டி.கே.சுரேஷ் எம்.பி., 'டி.கே.சிவக்குமார் நாளை(அதாவது இன்று) டெல்லிக்கு வருவார். அவர் காங்கிரஸ் தலைவர்களுடன் கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிப்பார். டி.கே.சிவக்குமார் டெல்லிக்கு வருவது உறுதி' என்று கூறினார்.


Next Story