தினசரி கொரோனா பாதிப்பு 500-க்கு கீழ் வந்தது
கொரோனாவில் இருந்து புதிதாக 958 பேர் குணமடைந்தனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இறங்கு முகமாக உள்ளது. நேற்று முன்தினம் 756 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 473 பேர் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதுவரை மொத்தம் 4 கோடியே 49 லட்சத்து 86 ஆயிரத்து 934 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவில் இருந்து புதிதாக 958 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 47 ஆயிரத்து 472 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 492 குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 7 ஆயிரத்து 623 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 8 பேர் பலியானார்கள். கேரளாவில் விடுபட்ட ஒரு மரணம் உள்பட நேற்றைய பலி எண்ணிக்கை 7 ஆக இருந்தது. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 839 ஆக உயர்ந்தது.