ரூ.1,235 கோடி மதிப்பிலான போதை பொருட்களை மத்திய மந்திரி அமித்ஷா முன்னிலையில் அழிக்க முடிவு


ரூ.1,235 கோடி மதிப்பிலான போதை பொருட்களை மத்திய மந்திரி அமித்ஷா முன்னிலையில் அழிக்க முடிவு
x

நாட்டில் கைப்பற்றப்பட்ட ரூ.1,235 கோடி மதிப்பிலான போதை பொருட்களை மத்திய மந்திரி அமித்ஷா முன்னிலையில் நாளைய தினம் அழிக்க முடிவாகி உள்ளது.



புதுடெல்லி,


பிரதமர் மோடி தலைமையிலான அரசில் போதை பொருட்களுக்கு எதிரான பூஜ்ய சகிப்பின்மை கொள்கையின் ஒரு பகுதியாக கர்நாடகாவின் பெங்களூரு நகரில், போலீசாரால் பல்வேறு காலகட்டங்களில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை அழிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக கடந்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி நடந்த 75 நாள் பிரசாரத்தின்போது, 75 ஆயிரம் கிலோ போதை பொருட்களை அழிப்பது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இதுவரை, 5 லட்சத்து 94 ஆயிரத்து 620 கிலோ போதை பொருட்கள் அழிக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.8,409 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.

இவற்றில் ரூ.3,138 கோடி மதிப்பிலான 1 லட்சத்து 29 ஆயிரத்து 363 கிலோ போதை பொருட்களை, போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் தனிப்பட்ட முறையில் அழித்து உள்ளது.

இதில், மீதமுள்ள போதை பொருட்களை பிற அமைப்புகள் மற்றும் மாநில போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். இந்நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு நகரில் நாளை நடைபெற உள்ள போதை பொருள் கடத்தல் மற்றும் தேச பாதுகாப்பு என்ற தலைப்பிலான மண்டல மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொள்கிறார்.

இதில், ரூ.1,235 கோடி மதிப்பிலான 9,298 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் அழிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.


Next Story