சொத்து வரி விதிக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு; ஜம்முவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

Image Courtesy : PTI
ஜம்மு வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் சர்ச்சைக்குரியதாக மாறிய நிலையில், ஏப்ரல் மாதம் முதல் குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படும் என ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து ஜம்முவில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இன்று முழுமையாக மூடப்பட்டுள்ளன.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று தங்கள் பணியை புறக்கணித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த சொத்து வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story