டெல்லி; ரூ.40 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்


டெல்லி; ரூ.40 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
x

டெல்லியில், சர்வதேச சந்தையில் ரூ.40 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியின் மங்கோல்புரி தொழில்பேட்டை பகுதியில் போதை பொருள் கடத்தல் பற்றி வடக்கு சரக சிறப்பு பிரிவினருக்கு உளவு தகவல் கிடைத்தது. மணிப்பூர், அசாம், பீகார், மேற்கு வங்காளம், டெல்லி உள்பட நாட்டின் பிற பகுதிகளிலும் இந்த போதை பொருள் கடத்தல் கும்பல் செயல்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், சந்தேகத்திற்குரிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜம்மு பகுதியை சேர்ந்த அவர்கள் பரம்ஜீத் சிங் (வயது 53) மற்றும் ராஜ் குமார் (வயது 38) என தெரிய வந்தது. அவர்களிடம் நடந்த சோதனையில், 56 கிலோ எடை கொண்ட சர்வதேச சந்தையில் ரூ.40 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களிடம் இருந்து, லாரி ஒன்று, பல்வேறு மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அவர்கள் இருவரும் மணிப்பூர் மற்றும் அசாமில் உள்ள போதை பொருள் வினியோகஸ்தர்களிடம் இருந்து அவற்றை பெற்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.


Next Story