அம்பானிக்கு சொந்தமான நிறுவனத்தில் ஆம் ஆத்மி அரசின் நியமனங்களை ரத்து செய்ய டெல்லி கவர்னர் வலியுறுத்தல்


அம்பானிக்கு சொந்தமான நிறுவனத்தில் ஆம் ஆத்மி அரசின் நியமனங்களை ரத்து செய்ய டெல்லி கவர்னர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Jan 2023 10:27 AM GMT (Updated: 13 Jan 2023 10:39 AM GMT)

சட்டத்தின் சரியான செயல்முறை பின்பற்றப்படாததால், ஆம் ஆத்மி அரசின் நியமனம் சட்டவிரோதமானது என்று என்று வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களில் (பி.எஸ்.இ.எஸ். ராஜ்தானி பவர் லிமிடெட்) மற்றும் (பி.எஸ்.இ.எஸ். யமுனா பவர் லிமிடெட்) வாரிய உறுப்பினர்களாக ஆம் ஆத்மி அரசு நியமித்த நபர்களை திரும்ப பெற வேண்டும் என டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் நபர்களை சட்ட விரோதமாக நியமித்ததில், ஆம் ஆத்மி கட்சி முழு அரசியல் சட்ட விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நியமனங்களை நீக்கி, அவர்களுக்குப் பதிலாக மூத்த அரசு அதிகாரிகளை நியமிக்குமாறும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதில் பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் ஜாஸ்மின் ஷா, நவீன் என்.டி. குப்தா (ஆம் ஆத்மி எம்.பி., என்.டி. குப்தாவின் மகன்), உமேஷ் தியாகி மற்றும் ஜே.எஸ். தேஸ்வால் ஆகியோர் அடங்குவர். டெல்லி துணை நிலை கவர்னர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சட்டத்தின் சரியான செயல்முறை பின்பற்றப்படாததால், வாரியங்களுக்கு அவர்களின் நியமனம் மிகவும் சட்டவிரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story