பணம் தர மறுத்த பெற்றோரை சரமாரியாக தாக்கிய மகன்.. தந்தை உயிரிழப்பு..!


பணம் தர மறுத்த பெற்றோரை சரமாரியாக தாக்கிய மகன்.. தந்தை உயிரிழப்பு..!
x

கோப்புப்படம் 

புதுடெல்லியில் பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.

புதுடெல்லி,

மேற்கு டெல்லியின் பதே நகர் பகுதியில் பணத்திற்காக தந்தையை கொன்ற 34 வயது நபரை போலீசார் கைதுசெய்தனர்.

ஜஸ்தீப் என்ற அந்த நபர் பங்குச்சந்தையில் ரூ.7 லட்சத்திற்கும் மேல் இழந்துள்ளார். இதனால் அவர் தனது பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவரது பெற்றோர் அவருக்கு பணம் தர மறுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தனது தாய், தந்தை என்றும் பாராமல் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் 65 வயதான ஸ்வர்ன்ஜீத் சிங் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். மேலும் அவரது மனைவி சர் கங்காராம் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜல்தீப்பை கைதுசெய்த போலீசர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story