டெல்லி: மெட்ரோ ரெயில் ஸ்மார்ட் அட்டைகள் சலுகை விலையில் விற்பனை; 2 ஊழியர்கள் பணி நீக்கம்


டெல்லி: மெட்ரோ ரெயில் ஸ்மார்ட் அட்டைகள் சலுகை விலையில் விற்பனை; 2 ஊழியர்கள் பணி நீக்கம்
x

டெல்லி மெட்ரோ ரெயில் ஸ்மார்ட் அட்டைகளை மக்களுக்கு சலுகை விலையில் விற்ற 2 ஊழியர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.


புதுடெல்லி,


டெல்லி மெட்ரோ ரெயில் கழகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் ஸ்மார்ட் அட்டைகளை சட்டவிரோத வகையில், மக்களுக்கு சலுகை விலையில் விற்று வருகின்றனர் என அதிகாரிகளின் கவனத்திற்கு தகவல் சென்றுள்ளது.

இதுபற்றி நீண்டகாலம் கண்காணிப்பு பணி நடந்து வந்தது. இதில், டெல்லி மெட்ரோ ரெயில் கழகத்தின் ஊழியர் ஒருவரும், குதுப் மினார் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர் ஒருவரும் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்தது அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

அவர்கள் இருவரும் மெட்ரோ வளாகத்திற்கு வெளியே, அங்கீகரிக்கப்படாத முறையிலான ரீசார்ஜ் மற்றும் மெட்ரோ ஸ்மார்ட் அட்டைகளை மக்களுக்கு சலுகை விலையில் விற்று வந்துள்ளனர்.

கடந்த ஒரு வார கண்காணிப்புக்கு பின்னர், அவர்கள் விற்பனையில் ஈடுபட்டபோது, பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து அதுபோன்ற 23 அட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, 2 ஊழியர்களில் ஒருவர் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

டெல்லி மெட்ரோ ரெயில் கழகத்திற்கு உட்பட்ட பணியாளர் உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்து, தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story