டெல்லி: ஆம் ஆத்மி மந்திரி ராஜ்குமார் ஆனந்த் திடீர் ராஜினாமா


டெல்லி: ஆம் ஆத்மி மந்திரி ராஜ்குமார் ஆனந்த் திடீர் ராஜினாமா
x
தினத்தந்தி 10 April 2024 12:31 PM GMT (Updated: 10 April 2024 12:40 PM GMT)

ராஜ்குமார் ஆனந்த் இன்று தனது மந்திரி பதவி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி சமூக மேம்பாட்டுத்துறை மந்திரியாக இருந்தவர் ராஜ்குமார் ஆனந்த். அவர் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். மேலும் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ராஜ்குமார் ஆனந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

ஆம் ஆத்மி கட்சி ஊழலை எதிர்த்து போராட பிறந்தது. ஆனால் இன்று அந்தக் கட்சி ஊழலில் சிக்கித் தவிக்கிறது. மந்திரி பதவியில் பணியாற்றுவது எனக்கு கடினமாகிவிட்டது. இந்த ஊழலுடன் எனது பெயரை இணைக்கமுடியாது என்பதால் மந்திரி பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தேன்.

இன்று அரசியல் மாறவில்லை ஆனால் அரசியல்வாதி மாறிவிட்டார். எனது ராஜினாமா கடிதத்தை முதல் மந்திரி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன்.

தலித் பிரதிநிதித்துவம் பற்றி பேசப்படும்போது பின் இருக்கை எடுக்கும் கட்சியில் நான் அங்கம் வகிக்க விரும்பவில்லை. நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story