காஷ்மீரில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் பறிமுதல்


காஷ்மீரில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் பறிமுதல்
x

4 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

.

ஜம்மு,

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ஹயாத்புரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் குழுவாக இணைந்து அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு 4 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story