துருவநாராயணின் மனைவி வீணா மரணம்


துருவநாராயணின் மனைவி வீணா மரணம்
x

துருவநாராயணின் மனைவி வீணா மரணம் அடைந்தார்.

மைசூரு:

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்தவர் துருவநாராயண். முன்னாள் எம்.பி.யான இவர், சட்டசபை தேர்தலில் நஞ்சன்கூடு தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருந்தார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக கடந்த மாதம் (மார்ச்) அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த நிலையில் நஞ்சன்கூடு தொகுதியில் அவரது மகன் தர்ஷனுக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது. இந்த நிலையில் துருவநாராயணின் மனைவி வீணாவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி வீணா மரணம் அடைந்தார்.

தாய் வீணாவின் மரணம் கேட்டதும், நஞ்சன்கூடுவில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தர்ஷன், பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு மைசூருவுக்கு திரும்பி வந்தார். இதையடுத்து வீணாவின் உடல், சாம்ராஜ்நகர் அருகே ஹெக்கவாடியில் துருவநாராயணின் சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.

வீணாவின் மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story