தீபாவளி பண்டிகை: டெல்லியில் கொடி அணிவகுப்பு நடத்திய போலீசார்


தீபாவளி பண்டிகை:  டெல்லியில் கொடி அணிவகுப்பு நடத்திய போலீசார்
x

டெல்லியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போலீசார் இன்று பல்வேறு இடங்களிலும் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.



புதுடெல்லி,


நாடு முழுவதும் ஒரு சில நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து சத் பூஜை உள்ளிட்டவையும் மக்களால் கொண்டாடப்பட உள்ளன. இதனை முன்னிட்டு பொதுமக்கள் கடைகளுக்கு சென்று பலகாரம், உடைகள் உள்ளிட்ட தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், பண்டிகை காலத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, டெல்லியில் சரோஜினி நகர் சந்தை பகுதியில் போலீசார் இன்று கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். இதுபற்றி சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு காவல் ஆணையாளர் எஸ்.பி. ஹூடா கூறும்போது, கூட்டத்தினரை ஒழுங்குபடுத்துவதும், அறிவுரை வழங்குவதும் எங்களது கடமை.

சமூக விரோத மற்றும் தேசவிரோத சக்திகள், யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் பார்த்து கொள்ள வேண்டியும் உள்ளது. பண்டிகை காலங்களில் போலீசார் பணியில் இருப்பது அவசியம். மகளிர் பாதுகாப்பிற்காக மகளிர் போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.


Next Story