பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தர கூடாது; காஷ்மீரில் மக்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை


பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தர கூடாது; காஷ்மீரில் மக்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை
x

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருபவரின் சொத்துகள் முடக்கம், கைது என நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்று மக்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.


ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வேட்டையில் பாதுகாப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். எனினும், பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள், தங்கும் இல்லம் போன்ற வசதிகளை உள்ளூர் மக்கள் செய்து தருவது தெரிய வந்து உள்ளது.

இதுபற்றி ஸ்ரீநகர் போலீசார் விடுத்துள்ள செய்தியில், காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதோ, தளவாடங்களை வழங்குவதோ கூடாது என அனைத்து குடிமக்களிடமும் மீண்டும் வேண்டுகோளாக கேட்டு கொள்ளப்படுகிறது.

அப்படி இல்லாமல், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவது அல்லது தளவாட உதவிகளை வழங்குவது நிரூபிக்கப்பட்டால், அவர்களின் சொத்துகளை முடக்கம் செய்வது அல்லது பறிமுதல் செய்வது முதல் கைது வரை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

சமீபத்தில் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த சம்பவத்தில், காஷ்மீர் போலீசின் சிறப்பு புலனாய்வு பிரிவு ஸ்ரீநகரில் உள்ள 4 வீடுகளை முடக்கியது.

அவற்றில் 3 வீடுகள் பர்தானா குவாமர்வாரி பகுதியிலும், ஒரு வீடு சங்கம் ஈத்கார் பகுதியிலும் அமைந்து உள்ளன. இந்த வீடுகளில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்க புகலிடம் அளிக்கப்பட்டு உள்ளது என போலீசார் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கின்றது.


Next Story