"திருப்பதியில் தரிசனத்திற்காக இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம்" - தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்


திருப்பதியில் தரிசனத்திற்காக இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம் - தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்
x

இலவச தரிசனத்திற்கான முன்பதிவு டோக்கன்களை கீழ் திருப்பதியில் உள்ள மூன்று இடங்களில் பெற்றுக் கொள்ள தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், இலவச தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த இலவச தரிசனத்திற்கான முன்பதிவு டோக்கன்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பக்தர்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருக்காமல் இலவச தரிசனத்திற்கான முன்பதிவு டோக்கன்களை கீழ் திருப்பதியில் உள்ள மூன்று இடங்களில் பெற்றுக் கொள்ள தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. இலவச டோக்கன்கள் பெற்றுக் கொண்ட பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனத்திற்கு சென்றால் ஒன்று முதல் இரண்டு மணி நேரங்கள் சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story