டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இல்லம் அருகே பறந்த ஆளில்லா விமானம்; போலீசார் விசாரணை


டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இல்லம் அருகே பறந்த ஆளில்லா விமானம்; போலீசார் விசாரணை
x

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இல்லம் அருகே ஆளில்லா விமானம் பறந்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுடெல்லி,

டெல்லியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்-மந்திரியாக கெஜ்ரிவால் இருந்து வருகிறார். அவரது இல்லம் டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் அமைந்து உள்ளது.

இந்த நிலையில், டெல்லி போலீசார் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இல்லம் அருகே ஆளில்லா விமானம் ஒன்று பறந்துள்ளது என்ற தகவல் எங்களுக்கு கிடைக்க பெற்றுள்ளது.

அதுபற்றிய உண்மை தன்மைகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து இந்த விவகாரத்தில் டெல்லி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story