மும்பையில் ரூ.23 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 2 பேர் கைது


மும்பையில் ரூ.23 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 2 பேர் கைது
x

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 2 நபர்களை மும்பை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பையில் உள்ள கோவன்டி என்ற பகுதியில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், அந்த பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து மும்பை போலீசார் அங்கு நடத்திய தீவிர சோதனையில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 2 நபர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.23 லட்சம் மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story