மிசோரமில் ரூ.42 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்


மிசோரமில் ரூ.42 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
x
கோப்புப்படம் 
தினத்தந்தி 13 Nov 2023 12:02 AM GMT (Updated: 13 Nov 2023 6:20 AM GMT)

போதை மாத்திரைகளை கைப்பற்றிய போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ஐஸ்வால்,

மிசோரமின் சம்பை மாவட்டத்தில் உள்ள சோகாவ்தர் கிராமத்தில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அசாம் ரைபிள்ஸ் மற்றும் மிசோரம் காவல்துறையினர் அடங்கிய குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது ரூ.42 கோடி மதிப்பிலான 15.9 கிலோ மெத்தம்பேட்டமைன் போதை மாத்திரைகளை கைப்பற்றியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடத்தல் பொருட்களை வைத்திருந்த நபர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். போதை மாத்திரைகளை கைப்பற்றிய போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Next Story