தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு


தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு
x

தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய கோரி கனிமொழி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு கனிமொழி எம்.பி. வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அந்த தொகுதி வாக்காளர் சந்தானகுமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி, கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி அளித்த தீர்ப்புக்கும், விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்தது.இந்த நிலையில் இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அஜய் ரஸ்தோகி, பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது.

அப்போது கனிமொழி சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சனும், எதிர்மனுதாரர் சந்தானகுமார் சார்பில் வக்கீல் எஸ்.மகேஷ் என்பவரும் வாதிட்டனர்.இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கனிமொழியின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.


Next Story