காட்டுயானை தாக்கி பெண் சாவு


காட்டுயானை தாக்கி பெண் சாவு
x

உன்சூரில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்தார்.

மைசூரு:

உன்சூரில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்தார்.

விரட்டி சென்று...

கர்நாடகத்தில் மைசூரு, குடகு உள்ளிட்ட மாவட்டங்கள் வனப்பகுதிகளை கொண்டுள்ளன. இதனால் அங்குள்ள சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைகின்றன. அவ்வாறு வரும் விலங்குகள் கால்நடைகள், விவசாயி உள்பட பலரை தாக்கி கொன்று வருகின்றன.

இந்த நிலையில் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா சிக்கபீச்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சித்தேகவுடா. இவரது மனைவி சிக்கம்மா மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பெண் இருவரும் அங்குள்ள விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதிக்குள் இருந்து யானை ஒன்று வெளியேறியது.

அந்த யானை அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த இடத்திற்குள் நுழைந்தது. அப்போது யானை வருவதை அறிந்த இருவரும் தப்பி ஓட முயன்றனர். அப்போது அவர்களை விரட்டி சென்ற யானை, சிக்கம்மாவை தும்பிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் அங்கிருந்து தப்பித்து சென்று இதுகுறித்து கிராமத்தினர் கூறினார்.

மக்கள் பீதி

இதையடுத்து கிராம மக்கள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்து யானையை விரட்டி அடித்தனர். பின்னர், இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர்.

மேலும் பெண்ணை தாக்கி கொன்ற யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். சம்பவம் ெதாடர்பாக பிலிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விளைநிலத்திற்குள் புகுந்து பெண்ணை யானை மிதித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story