2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; வாக்குறுதியை பா.ஜ.க. நிறைவேற்றவில்லை - சச்சின் பைலட் குற்றச்சாட்டு


2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; வாக்குறுதியை பா.ஜ.க. நிறைவேற்றவில்லை - சச்சின் பைலட் குற்றச்சாட்டு
x

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை பா.ஜ.க. அரசியலாக்குகிறது என சச்சின் பைலட் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

பா.ஜ.க. அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை பா.ஜ.க. அரசியலாக்குகிறது. கடவுள் ராமர் அனைவருக்கும் சொந்தமானவர். ஆனால் அவரை பா.ஜ.க. தங்களுக்குரியவராக்க முயற்சிக்கிறது.

பா.ஜ.க. அரசால் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசாங்கம், இதுவரை 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

எதிர்வரும் மக்களவை தேர்தலில் 'இந்தியா' கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். அண்மையில் சத்தீஷ்காரில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்திருந்தாலும், வாக்கு சதவீதத்தில் குறைவு ஏற்படவில்லை. 'இந்தியா' கூட்டணியை பலப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன."

இவ்வாறு சச்சின் பைலட் தெரிவித்தார்.


Next Story