காஷ்மீரில் என்கவுண்ட்டர்; ராணுவ கர்னல், மேஜர் உயிரிழப்பு


தினத்தந்தி 13 Sept 2023 8:04 PM IST (Updated: 13 Sept 2023 10:54 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரின்போது பயங்கரவாதிகளின் தாக்குதலில் ராணுவ கர்னல் மற்றும் மேஜர் உயிரிழந்து உள்ளனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் திடீரென அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக ராணுவ வீரர்களும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில், ராஷ்டீரிய ரைபிள் படை பிரிவை வழிநடத்தி செல்லும் ராணுவ கர்னல் ஒருவர் மற்றும் ராணுவ மேஜர் என 2 ராணுவ உயரதிகாரிகள் உயிரிழந்து உள்ளனர்.

இதற்கு முன்பு, ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசின் சமூக ஊடக பதிவில் வெளியான செய்தியில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கோகர்நாக் பகுதியில் நடந்த என்கவுண்ட்டரில் ராணுவ அதிகாரிகள் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.


Next Story