எதிரிகள் நலனை பாதுகாப்பதில் கூட நாம் கவனம் செலுத்துபவர்கள்; பிரதமர் மோடி பேச்சு
இந்தியா என்ன யோசிக்கிறது என்று தெரிந்து கொள்ள உலகம் இன்று விரும்புகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
ஜப்பான், பப்புவா நியூ கினியா ஆகிய 3 நாடுகள் சுற்றுப்பயண நிறைவை தொடர்ந்து பிரதமர் மோடி இன்று காலை இந்தியா திரும்பியுள்ளார். டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவரை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேரில் சென்று வரவேற்றார்.
இதேபோன்று பிரதமர் மோடியை வரவேற்க திரளாக மக்கள் கூட்டம் கூடியிருந்தது. இதன்பின் பிரதமர் மோடி டெல்லியில் பொது மக்கள் முன்னிலையில் பேசும்போது, உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏன் கொடுத்தீர்கள்? என நாட்டில் உள்ள சிலர் என்னிடம் கேட்கின்றனர்.
இது புத்தர், காந்தியின் பூமி என கூறி கொள்ள நான் விரும்புகிறேன். நாம் எதிரிகளுக்கு கூட, அவர்களது நலனை பாதுகாக்கும் பணியை செய்பவர்கள். இன்று இந்த உலகம், இந்தியா என்ன யோசிக்கிறது? என தெரிந்து கொள்ள விரும்புகிறது என பேசியுள்ளார்.
நாட்டின் கலாசாரம் பற்றி நான் பேசும்போது, உலகத்தின் கண்களை நான் பார்த்தேன். நாட்டில் முழு மெஜாரிட்டியுடனான ஓர் அரசை நீங்கள் உருவாக்கி தந்ததில் இந்த நம்பிக்கை வந்துள்ளது. இப்போது கூடியிருக்கும் மக்கள் எல்லோரும், இந்தியாவை நேசிப்பவர்கள். பிரதமர் மோடியை அல்ல என அவர் கூறியுள்ளார்.