பாஜக என்றால் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய அரசு : பிரதமர் மோடி


பாஜக என்றால் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய அரசு : பிரதமர் மோடி
x

பாஜக என்றால் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய அரசு என்பதை மக்கள் அறிந்திருக்கிறார்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.

ஷிம்லா,

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

இமாச்சலப் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தல் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இம்முறை நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இமாச்சலப் பிரதேசத்தின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கானதாக இருக்கும்.

பாஜக என்றால் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய அரசு என்பதை மக்கள் அறிந்திருக்கிறார்கள். எனவே, இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக அரசு அமைய வேண்டும் என்ற முடிவை அவர்கள் எடுத்துவிட்டார்கள். காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பது அதன் வாடிக்கையாக கொண்டுள்ளது" என்றார்.


Next Story