"அனைவரும் சமம்; அவரவர் விரும்பும் மதத்தை பின்பற்றலாம்" - பாஜக பொதுச்செயலாளர் அருண்சிங்
பாஜக அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும் பிற மதத்தினரை இழிவுபடுத்துவதை கண்டிப்பதாகவும் பாஜக பொதுச்செயலாளர் அருண்சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் மதத்தின் பெயரால் பாஜக வன்முறையில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிய நிலையில் பாஜக பொதுச்செயலாளர் அருண்சிங் இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அருண்சிங், பாஜக அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும் பிற மதத்தினரை இழிவுபடுத்துவதை கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளளார். மேலும் பிற மதத்தை அவமதிக்கும் சித்தாந்தத்திற்கு எதிராக பாஜக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பின்படி அனைவரும் சமம் என்றும் அவரவர் விருப்பப்படி அவரவர் விரும்பும் மதத்தை பின்பற்றலாம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வளர்ச்சியின் பலன்களை அனைவரும் அனுபவிக்கும் சிறந்த நாடாக இந்தியாவை மாற்ற பாஜக உறுதி பூண்டுள்ளதாகவும் அருண்சிங் தெரிவித்தார்.
Related Tags :
Next Story