கடும் குளிர் எதிரொலி: பாட்னாவில் பள்ளிகளுக்கு 20-ந்தேதி வரை விடுமுறை


கடும் குளிர் எதிரொலி: பாட்னாவில் பள்ளிகளுக்கு 20-ந்தேதி வரை விடுமுறை
x

Image Courtesy : ANI

தினத்தந்தி 18 Jan 2024 12:27 AM GMT (Updated: 18 Jan 2024 7:31 AM GMT)

8-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு வரும் 20-ந்தேதி வரை விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்னா,

வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பீகார் மாநிலத்தில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அளவிற்கும் குறைவாக பதிவாகியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு பனிப்பொழிவு நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கடும் குளிர் காரணமாக பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு வரும் 20-ந்தேதி வரை விடுமுறை விடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.


Next Story