பிரதமர் மோடியுடன் பிரபல நடிகர் சந்திப்பு; ஒரு வார்த்தையை கூட ஒருபோதும் மறக்க மாட்டேன் என உருக்கம்


பிரதமர் மோடியுடன் பிரபல நடிகர் சந்திப்பு; ஒரு வார்த்தையை கூட ஒருபோதும் மறக்க மாட்டேன் என உருக்கம்
x

நீங்கள் கூறிய ஒரு வார்த்தையை கூட ஒருபோதும் மறக்க மாட்டேன் என பிரதமர் மோடியை சந்தித்த நடிகர் உன்னிமுகுந்தன் தெரிவித்து உள்ளார்.

திருவனந்தபுரம்,

தமிழில் சீடன் படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகர் உன்னிமுகுந்தன். இதன்பின் பல மலையாள படங்களில் நடித்து வருகிறார். பிரதமர் மோடியின் கேரள சுற்றுப்பயணத்தின்போது அவரை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு முகுந்தனுக்கு கிடைத்து உள்ளது.

அதுபற்றி தனது பேஸ்புக் பதிவில் வெளியிட்டு உள்ளார். அதில், நன்றி சார். 14 வயதில் இருந்து உங்களை நான் பார்த்து வருகிறேன். இறுதியாக தற்போது உங்களை சந்தித்து விட்டேன். இந்த பரவசத்தில் இருந்து நான் இன்னும் மீண்டு வரவேயில்லை என தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்து உள்ளார்.

கொச்சியில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் குஜராத்தியில் பேசி உன்னிமுகுந்தனை பிரதமர் மோடி வரவேற்றார். இதுபற்றி குறிப்பிட்ட அவர், மேடையில் கேம் சோ பைலா (எப்படி இருக்கிறீர்கள் அண்ணா?) என நீங்கள் கூறியது என்னை அதிர செய்தது.

உங்களை சந்தித்து, உங்களுடன் குஜராத்தியில் பேச வேண்டும் என்பது ஒரு பெரிய கனவு. அது நிறைவேறியது. உங்களுடைய 45 நிமிட நேரம். எனது வாழ்வின் சிறந்த 45 நிமிடங்கள் என முகுந்தன் தெரிவித்து உள்ளார்.

நீங்கள் என்னிடம் கூறிய ஒரு வார்த்தையை கூட ஒருபோதும் நான் மறக்க மாட்டேன். ஒவ்வோர் அறிவுரையும், நடைமுறையில் செய்து பார்த்து அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடியுடன் எடுத்து கொண்ட சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

1 More update

Next Story