எதிரிகளிடம் நமது வலிமையை காட்டுவதற்கு பதில் நமக்குள்ளே நாம் சண்டையிட்டு வருகிறோம் - ஆர்.எஸ்.எஸ். தலைவர்


எதிரிகளிடம் நமது வலிமையை காட்டுவதற்கு பதில் நமக்குள்ளே நாம் சண்டையிட்டு வருகிறோம் - ஆர்.எஸ்.எஸ். தலைவர்
x

எல்லையில் உள்ள எதிரிகளிடம் நமது வலிமையை காட்டுவதற்கு பதில் நமக்குள்ளே நாம் சண்டையிட்டு வருகிறோம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறினார்.

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நேற்று நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் முயற்சிக்க வேண்டும். உலக பொருளாதார மந்தநிலை, கொரோனா பெருந்தொற்று சமயத்தில் உலகின் பிற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டது. இந்த ஆண்டு ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இது மிகவும் பெருமைக்குரிய தருணம்.

எல்லையில் அமர்ந்துள்ள எதிரிகளிடம் நாம் நமது வலிமையை காட்டுவதில்லை. ஆனால், நாம் நமக்குள்ளேயே சண்டையிட்டு வருகிறோம். நாம் ஒரே நாடு என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

சில மதங்கள் வெளியில் இருந்து இந்தியா வந்தது. அவர்களுடன் நாம் போர் செய்துள்ளோம். ஆனால், வெளியாட்கள் சென்றுவிட்டனர். இப்போது அனைவரும் இங்கு உள்ளவர்கள் தான்' என்றார்.


Next Story