ஆம் ஆத்மி வேட்பாளர் மீது வழக்கு
வேட்பு மனு தாக்கலின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் 3 வாகனங்களில் மட்டும் வர வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பி.டி.எம். லே-அவுட் தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சீனிவாச ரெட்டி நேற்று முன்தினம் தனது கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக அவர் 14 வாகனங்களில் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றதாக கூறப்படுகிறது. அந்த வாகனங்களில் கட்சி சின்னங்கள், அவரது புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து வேட்பு மனு தாக்கலின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது ஆடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story