உத்தரகாண்ட்: ரெயில்வே சுரங்கத்தில் திடீர் தீ விபத்து - 40 தொழிலாளர்கள் மீட்பு


உத்தரகாண்ட்: ரெயில்வே சுரங்கத்தில் திடீர் தீ விபத்து - 40 தொழிலாளர்கள் மீட்பு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 6 Nov 2023 11:32 PM IST (Updated: 6 Nov 2023 11:53 PM IST)
t-max-icont-min-icon

தீ விபத்து ஏற்பட்டபோது சுரங்கப்பாதையில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷிகேஷ்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ்-கர்னாபிரயாக் இடையே ரெயில்வே திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தில் ஒரு சுரங்கம் அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தநிலையில், அந்த பகுதியில் திடீரென தீப்பற்றிக்கொண்டது. இதனால் சுரங்கம் முழுவதும் புகைமண்டலமானது. ஆனால் உடனடியாக சுதாரித்துக் கொண்டதால், வேலைபார்த்த அனைத்து தொழிலாளர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதுகுறித்து தலைமை திட்ட மேலாளர் அஜித் சிங் யாதவ் கூறுகையில், "இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது. ரெயில்வே திட்டத்தின் சுரங்கப்பாதை எண் 15-இல் நடந்தது. சுரங்கப்பாதையில் நீர் கசிவைத் தடுக்க பயன்படுத்தப்பட்ட ரசாயனத்தால் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த அரை மணி நேரம் ஆனது. தீ அணைக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சுரங்கப்பாதையில் பணி மீண்டும் தொடங்கியது. சுரங்கப்பாதைக்குள் பணிபுரிந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை" என்று அவர் தெரிவித்தார்.

தீ விபத்து ஏற்பட்டபோது சுரங்கப்பாதையில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்ததாக மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.


Next Story