மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு, 7 பேர் படுகாயம்


மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு, 7 பேர் படுகாயம்
x

Image Courtesy : ANI

சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மே 3-ந் தேதி கலவரம் வெடித்தது. அங்கு நடந்த வன்முறை சம்பவங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டங்களில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து வன்முறை நடந்த இடங்களில் போலீஸ் மற்றும் ராணுவ படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story