அசாமில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: 11 லட்சம் பேர் பாதிப்பு.!


அசாமில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: 11 லட்சம் பேர் பாதிப்பு.!
x

அசாமில் பெய்துவரும் தொடர் கனமழையால், அங்குள்ள 1,510 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கவுகாத்தி,

அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாநிலம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் முக்கிய ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ள நிலைமையும் மோசமடைந்துள்ளது.

அங்குள்ள 25 மாவட்டங்களில் குறைந்தது 11 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பஜாலி மாவட்டம் வெல்லத்தால், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் கௌரங்கா நதிகளில் வெள்ளநீர் அதிகரித்து பல பகுதிகளில் அபாய அளவை தாண்டி பாய்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களின் நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அவசிய தேவைகள் தவிற மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர். மாநிலத்தில் தற்போதுவரை கனமழை, வெள்ளத்திற்கு 1,510 கிராமங்கள் தற்போது நீரில் மூழ்கியுள்ளன.


Next Story