இந்திய வரலாற்றில் முதன்முறையாக 10 மாத குழந்தைக்கு இந்திய ரயில்வேயில் பணி


இந்திய வரலாற்றில் முதன்முறையாக 10 மாத குழந்தைக்கு இந்திய ரயில்வேயில் பணி
x
தினத்தந்தி 12 July 2022 3:35 PM IST (Updated: 12 July 2022 4:26 PM IST)
t-max-icont-min-icon

இந்திய வரலாற்றில் முதன்முறையாக10 மாத குழந்தைக்கு இந்திய ரயில்வேயில் பணி வழங்கப்பட்டு உள்ளது.

சத்திஸ்கர்,

சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் என்பவர் விலாய் பகுதியில் ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் வாகன விபத்தில் ராஜேந்திரகுமாரும், அவரது மனைவியும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இவர்களது 10 மாத குழந்தை ராதிகா யாதவ் உயிர் பிழைத்தது . இந்த நிலையில், ரயில்வே விதிகளின் படி, ராஜேந்திரகுமாரின் குடும்பத்திற்கு ராய்ப்பூர் ரயில்வே கோட்டம் அனைத்து உதவிகளையும் செய்தது.

தற்போது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வரும் 10 மாத குழந்தையான ராதிகா யாதவுக்கு தன் தந்தையின் பணி வழங்கப்பட்டு உள்ளது. சிறிய குழந்தை என்பதால், அதன் கைரேகையை பதிவு செய்து பணி நியமனம் உறுதிபடுத்தப்பட்டது.

குழந்தை 18 வயதை பூர்த்திசெய்ததும், சுய விருப்பத்தின் அடிப்படையில் பணிக்கு சேரலாம் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Next Story