வாலிபரிடம் ரூ.6 லட்சம் நூதன மோசடி


வாலிபரிடம் ரூ.6 லட்சம் நூதன மோசடி
x
தினத்தந்தி 5 Aug 2023 6:45 PM GMT (Updated: 5 Aug 2023 6:46 PM GMT)

ஆன்லைனில் வரன் பார்த்தபோது பழகி வாலிபரிடம் ரூ.6 லட்சம் நூதன மோசடி செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

பீனியா:

பெங்களூரு பீனியா பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் வர்க்கீஸ். இவர் தனக்கு ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் வரன் பார்த்து வந்தார். அப்போது அலோசியா என்ற பெண் அவருக்கு அறிமுகம் ஆனார். இதையடுத்து அவர்கள் இருவரும் செல்போன் எண்களை பரிமாறி பேசி வந்தனர். இதற்கிடையே அலோசியா, தான் விபத்தில் சிக்கி இருப்பதாகவும், தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும்.

அதற்காக ரூ.6 லட்சம் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அதை நம்பிய ராபர்ட் வர்க்கீசும், அலோசியா கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.6 லட்சத்தை பல்வேறு தவணைகளாக அனுப்பி வைத்தார். அதன்பின்னர் நீண்ட நாட்கள் ஆகியும் அலோசியாவிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து அவர் பீனியா போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் இந்த நூதன மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அலோசியா உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story