முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாள் - ராகுல், பிரியங்கா மரியாதை


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாள் - ராகுல், பிரியங்கா மரியாதை
x

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினர்.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்களும் ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், அப்பா, ஒவ்வொரு நொடியும் என்னுடன், என் இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். நாட்டிற்காக நீங்கள் கண்ட கனவை நிறைவேற்ற நான் எப்போதும் முயற்சிப்பேன்' என்று பதிவிட்டு ராஜீவ் காந்தி குறித்த ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார்.


Next Story