முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் - நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை


முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் - நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை
x

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை செலுத்தினர்.

புதுடெல்லி,

மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 98-ஆவது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் மத்திய மந்திரிகள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

1 More update

Next Story