அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பஞ்சாப் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது


அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பஞ்சாப் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது
x

அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பஞ்சாப் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது செய்யப்பட்டார்.

பிரோஸ்பூர்,

பஞ்சாபில் பஞ்சாயத்துகளுக்கு மானியம் வழங்குவதில் தொகுதி மேம்பாட்டு திட்ட அதிகாரி ஊழல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை எழுப்பிய அந்த மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குல்பீர் சிங் ஜிரா தொண்டர்களுடன் திட்ட அதிகாரி அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தார்.

இந்நிலையில் அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுப்பதாக திட்ட அதிகாரி தரப்பில் போலீஸ் நிலையத்தில் குல்பீர் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரோஸ்பூரில் குல்பீர் சிங்கை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வருகிற 31-ந் தேதி வரை கோர்ட்டு காவல் விதிக்கப்பட்ட நிலையில் பிரோஸ்பூர் சிறையில் குல்பீர் சிங் ஜிரா அடைக்கப்பட்டார்.


Next Story