தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவுக்கு அறுவை சிகிச்சை - மருத்துவமனையில் அனுமதி


தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவுக்கு அறுவை சிகிச்சை - மருத்துவமனையில் அனுமதி
x

சந்திரசேகர ராவ் நேற்று வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்தார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ். சமீபத்தில் அங்கு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, பரிசோதனையில் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக மருத்துவமனை கூறியது. மேலும் இதற்காக அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது.

இந்த நிலையில் இன்று அவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. மேலும் சந்திரசேகர ராவின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், இந்த இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் சந்திரசேகர ராவ் குணமடைய 6 முதல் 8 வாரங்கள் ஆகும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

1 More update

Next Story