கல்வான் மோதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரரின் மனைவி ராணுவ அதிகாரியானார்...!


கல்வான் மோதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரரின் மனைவி ராணுவ அதிகாரியானார்...!
x

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன படைகள் கடந்த 2020-ம் ஆண்டு மோதிக்கொண்டன.

டெல்லி,

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய - சீன படைகள் மோதிக்கொண்டன. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர்.

கல்வான் மோதலில் வீரமரணமடைந்த வீரர்களில் தீபக் சிங்கும் ஒருவர். வீரமரணமடைந்த தீபக் சிங்கிற்கு வீர்சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, திபக் சிங்கின் மனைவி ரேகா. கணவர் வீரமரணமடைந்த நிலையில் ரேகா ராணுவத்தில் சேர்ந்தார். சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்ட ரேகா ராணுவ அதிகாரியாகியுள்ளார்.

ராணுவ அதிகாரியான ரேகா கிழக்கு லடாக்கில் பணியமர்த்தப்பட்டுள்ளார். ராணுவ வீரரான தனது கணவர் தீபக் சிங் வீரமரணமடைந்த நிலையில் அவரது மனைவி ரேகா ராணுவ அதிகாரியாக தேர்வாகியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story