கிரிக்கெட் சூதாட்டம்; 18 பேர் கைது
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு:
ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளின் போது பெங்களூருவில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வரும் கும்பல்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அதன்படி, பெங்களூரு மேற்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சந்திரா லே-அவுட், பேடராயனபுரா, கோவிந்தராஜநகர், மாகடி ரோடு, ஆர்.ஆர்.நகர், உப்பார்பேட்டை, விஜயநகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் சூதாட்ட தரகர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டு கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 18 பேரிடம் இருந்து ஒட்டுமொத்தமாக ரூ.4.68 லட்சம், 17 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story